திபெத் எல்லையில் தேசிய கொடி ஏற்றிய இந்தியா! – சுதந்திரதின விழா!
இன்று சுதந்திர தின விழாவையொட்டி இந்திய – சீன எல்லையில் தேசிய கொடியை ஏற்றி இந்திய ராணுவ வீரர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.
இன்று நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய திபேத்திய எல்லையான பாங்காங் சோ பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரம் அடி உயரமான குளிர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்துள்ளனர்.