வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (10:02 IST)

சரக்கு ரயில் மோதி தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் பலி: மோடி இரங்கல்!

சரக்கு ரயில் மோதி தூங்கிக்கொண்டிருந்த 17 பேர் பலியான கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் ஊரடங்கு மூன்றாம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சொந்த மாநிலத்தில் இருந்து பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலத்திற்கு சென்றவர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வேலையின்றி பசியும் பட்டினியுமாக உள்ளனர். 
 
அவர்களில் பலர் சாலை வழியே தங்கள் சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் இருந்து ஒருசில வெளி மாநில தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது சோர்வு காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியதாக தெரிகிறது.
அப்படி உரங்குகையில், அதிகாலை 4 மணிக்கு அந்தப் பக்கம் வந்த சரக்கு ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கியவரக்ள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் மரணம் அடைந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. 
 
இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது, மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.