திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2020 (17:24 IST)

ரிஷி கபூர் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !

பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். இந்தியில் பாபி, கர்ஸ், அமர் அக்பர் ஆண்டனி போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது மிக பிரபலமான பாலிவுட் நடிகராக வலம் வருகிறார். சமீப காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ரிஷி கபூர் காலமானது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன் தான் உடைந்து போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பன்முகத்தன்மை, அன்பு, இவைதான் ரிஷி கபூர். பல திறமைகளின் பெட்டகம். அவர். எப்போதும் அவருடனான உரையாடல்கள் நினைவில் இருக்கும். சினிமா மீது தீராக்காதலும் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். அவரது மறைவு செய்தி அறிந்து மனவருத்தம் கொண்டேன். அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு இரங்கல்கள்''  என தெரிவித்துள்ளார்.