மோடி சொதப்பிட்டா... ராஜினாமா முடிவிற்கு வந்த உத்தவ் தாக்கரே?
மாநில சட்டமேலவை உறுப்பினராக உதவும்படி மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கட்சி கூட்டணி அமைத்த நிலையில் தேர்தலுக்கு பின் இந்த கூட்டணி உடைந்து. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைப் பிடித்தது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்ற போது அவர் எம்எல்ஏவாக இல்லை. எனவே, அடுத்த 6 மாதங்களுக்குள் அவர் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்றும் கவர்னரால் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆறு மாத கால அவகாசம் மே மாதம் 28 ஆம் தேதியுடன் முடிகிறது. அதாவது இன்னும் 28 நாட்களுக்குள் அவர் எம்எல்ஏ ஆகவேண்டும் என்றும், இல்லை எனில் அவரது பதவிக்கு ஆபத்து.
கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவெ, உத்தவ் தாக்கரே தனது பதவி விஷயத்தில் தலையிட்டு நல்ல முடிவை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்.
அதாவது ஆளுநரிடம் இருக்கும் இட ஒதுக்கீட்டின் கீழ் சட்டமேலவை உறுப்பினராக இவரை நியமிக்க கேட்டு மோடியிடன் போன் காலில் பேசியுள்ளார் உத்தவ் தாக்கரே. அதோடு, இப்பிரச்சனை தீர்க்கப்படாவிடில் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் மோடியிடம் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.