வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 29 ஏப்ரல் 2020 (16:20 IST)

நடிகர் இர்ஃபான் கான் மறைவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி !

இந்திய திரைப்படங்களில் முக்கியமாக பாலிவுட் படங்களில் மிக சிறந்த நடிகராக அறியப்படுபவர் இர்பான் கான். முக்கியமான மாஸ் ஹீரோவாக இல்லாவிட்டாலும் கூட மதிப்பு மிக்க குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர். இவரது நடிப்பில் வெளியான லஞ்ச் பாக்ஸ், ப்ளாக்மெயில் போன்ற படங்கள் விமர்சனரீதியா வரவேற்பை பெற்றவை. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் ஜுராசிக் வேர்ல்ட், லைஃப் ஆப் பை போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

கடந்த சில ஆண்டுகளாக குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்பான் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இர்ஃபானில் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில்,  இர்ஃபானின் மறைவு என்பது சினிமா, நாடக உலகிற்கு ஏற்பட்ட இழப்பாகும்.அவரது தனித்துவமான நடிப்பால் நினைவு கூறப்படுவார். என் நினைவுகள் அவரது குடும்பத்தை சுற்றி உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.