ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (18:17 IST)

விநாயகருக்குரிய அபிஷேங்கள் என்னென்ன?

Vinayagar Chaturthi
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகர் கோவில் உள்ள நிலையில் பல விநாயகர் கோவிலில் பலவிதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 
 
அந்த வகையில் வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கம் என்ற விநாயகர் கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் செஞ்சேரிமலை என்ற பகுதியில் உள்ள விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்தால் குடும்பம் செழிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  
 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருநீற்று விநாயகருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் பணிக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இதேபோல் ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள விநாயகருக்கு ஒவ்வொரு விதமான அபிஷேகம் செய்தால் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.
 
Edited by Mahendran