வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (15:49 IST)

உத்தரகண்ட் மக்களுக்காக தேசமே பிரார்த்திக்கிறது! – பிரதமர் மோடி ட்வீட்!

உத்தரகண்ட் மக்களுக்காக தேசமே பிரார்த்திக்கிறது! – பிரதமர் மோடி ட்வீட்!
உத்தரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

உத்தர்கண்ட் மாவட்டம் சமோலி மாவட்டத்தில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால் தௌளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்பரித்து வந்த வெள்ளம் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை அடித்து சென்றுள்ளது. இந்த பேரிடர் சம்பவத்தால் 150 பேர் வரை மாயமாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ” உத்தரகாண்ட் மீட்புப் பணிகள் குறித்து விசாரித்தேன்; இந்தியா முழுவதும் உத்தரகாண்ட் மாநில மக்களுடன் துணை நிற்கிறது; அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டுமென தேசம் பிரார்த்திக்கிறது” என கூறியுள்ளார்.