செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (11:12 IST)

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு:மக்கள் பதற்றம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்ததால் மக்கள் பதற்றமாக உள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒடேசா மற்றும் மிட்லேண்ட் ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையில் சனிக்கிழமை போலீஸ் அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிப்பாட்டியுள்ளார். உள்ளே இருந்த நபர் திடீரென ஒரு துப்பாக்கியை எடுத்து காவலரை சுட ஆரம்பித்தார்.

மேலும் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார். பின்பு தனது காரில் இருந்து இறங்கி ஒரு தபால் நிலைய காரை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீஸார்கள் அந்த மர்ம நபரை சுட்டு கொன்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்து ஒடேசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என போலீஸார் கூறுகின்றனர். கடந்த ஆகஸ்து மாதம் எல் பசோவின் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியக சுட்டதில் 22 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.