செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (14:13 IST)

பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!

பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி போலவே தோற்றம் கொண்ட நபர் களமிறங்கியுள்ளது வைரலாகியுள்ளது.

பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை பீகாரில் யார் ஆட்சி அமையும் என்று மக்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தலில் மோடி போலவே உள்ள ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

ஹம்ஷகல் அபிநந்தன் என்ற அந்த நபர் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் ஹதுவா பகுதியை சேர்ந்தவர். தற்போது அவர் ஹதுவா பகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் தனது பிரச்சாரத்தில் மோடி ஸ்டைலிலேயே பேசி வருகிறாராம். முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார் இந்த அபிநந்தன்.

இந்த முறையும் சுயேட்சையாக போட்டியிடும் இவர் வெற்றிபெற்று முதல் சுயேட்சை முதல்வராகவும் திட்டமிட்டு வருகிறாராம். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.