”இங்க யாருக்குமே கொரோனா கிடையாது” – அசால்ட்டாய் இருந்த பாஜக தலைவருக்கு கொரோனா!

Dileep ghosg
Prasanth Karthick| Last Modified திங்கள், 19 அக்டோபர் 2020 (11:48 IST)
மேற்கு வங்கத்தில் கொரோனாவே இல்லை என்று பேசிய பாஜக மூத்த தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பாஜக நடத்திய பேரணியை கொரோனா காரணமாக போலீசார் கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்த நிலையில் பாஜக மூத்த தலைவர் திலிப் கோஷ், மேற்கு வங்கத்தில் கொரோனா இல்லை என்றும், அரசியலுக்காக சிலர் கொரோனாவை பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது திலிப் கோஷூக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதை தொடர்ந்து அவர் கொல்கத்தாவின் சால்ட் லேக் சிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :