சின்ன மேடை எவ்ளோ பேரை தாங்கும்? – சரிந்து விழுந்த ஜனதா தள பிரச்சார மேடை!

Bihar
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:43 IST)
பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பாஜக நடத்திய பிரச்சார கூட்டத்தின் மேடை சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உறவினர் சந்திரிகா காய் என்பவர் சோன்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இதற்காக வேட்புமனு தாக்கல் செய்த அவர் சரன் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார கூட்டத்தில் பேசுவதற்காக சென்றார். அவர் மேடையேறிய நிலையில் அங்குள்ள உள்ளூர் ஆட்கள் அவருக்கு மாலை அணிவிக்க மேடையில் ஏறியதால் அமளி ஏற்பட்டது. மேலும் சின்ன மேடையில் பலரும் ஏறியதால் பாரம் தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :