பெர்லின் சுவர்-அயோத்தி வழக்கு: பிரதமரின் ஒரு ஒப்பீடு

Last Modified சனி, 9 நவம்பர் 2019 (21:43 IST)
கி ழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என இரண்டு ஜெர்மனி நாடுகளும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நிலையில் இதே நவம்பர் 9 ஆகிய நாடுகளுக்கும் இடையில் இருந்த சுவர் உடைக்கப்பட்டது. அதேபோல் அயோத்தி வழக்கில் இருந்த சுவரும் உடைக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெர்லின் சுவர் என்று அழைக்கப்படும் கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய இரு நாடுகளையும் பிரிக்கும் சுவரை உடைக்க பல ஆண்டுகளாக இருநாட்டு மக்கள் போராட்டம் செய்து வந்தனர். அதன்பின்னர் மக்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த சுவரை உடைத்த்து. பெர்லின் சுவர் உடைக்கப்பட்ட நாள் நவம்பர் 9ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனையாக இருந்த அயோத்தி பிரச்சனை தற்போது இறுதி கட்டத்தை அடைந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த பிரச்சனை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு வெளிவந்த தேதியும் நவம்பர் 9 என்பது குறிப்பிடத்தக்கது
இதனை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி இதே நவம்பர் மாதம் 9 ஆம் தேதி தான் ஜெர்மனியில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. அதேபோல அயோத்தி வழக்கிலும் நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது எப்படி வரலாற்றில் நினைவுகூறப்படுகிறதோ, அதேபோல் அயோத்தி வழக்கின் தீர்ப்பும் வரலாற்றில் நினைவு கொள்ளப்படும் என்று கூறினார்
மேலும் புதிய இந்தியாவை உருவாக்க இந்நாளில் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என்றும் புதிய இந்தியாவில் எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :