டெல்லி இந்தியா கேட் பகுதியில் சுபாஷ் சந்திர போஸ் சிலை – பிரதமர் மோடி அறிவிப்பு!
டெல்லி இந்தியா கேட் பகுதியிலிருந்து அமர் ஜவான் ஜோதி நீக்கப்பட்ட நிலையில் அங்கு நேதாஜிக்கு சிலை வைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களை கௌரவிக்கும் விதமாக அமர் ஜவான் ஜோதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த நிலையில் தற்போது அதை இடம் மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதிக்கு பதிலாக இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேதாஜியின் 125வது பிறந்தநாளையொட்டி கிரானைட்டில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.