திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (11:34 IST)

5ஜி தொழில்நுட்ப பிரச்சினை; ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடக்கம்!

5ஜி தொழில்நுட்ப பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா விளக்கம் அளித்த நிலையில் ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை மேம்பாடு தொடங்கப்படுவதால் விமான சேவைகளுக்கான தொடர்பை அது பாதிக்கும் என்றும் இதனால் பயணிக்கும் விமானங்களுக்கு ஆபத்து நேரலாம் என்றும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. அதை தொடர்ந்து ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை மற்றும் அதன் பாதுகாப்பு தன்மை குறித்து விமான நிறுவனங்களுக்கு விளக்கம் அளித்தது. அமெரிக்காவின் விளக்கத்தை தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் சில விமானங்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளன.