செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 மார்ச் 2021 (21:52 IST)

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 17ஆம் தேதி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் படிப்படியாக உயர்ந்து வருவதை அடுத்து வரும் 17ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில நகரங்களில் இரவு நேரம் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மார்ச் 17ஆம் தேதி அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அதிகம் செலுத்துவது, இரவு நேர ஊரடங்கு எந்தெந்த நகரங்களில் மீண்டும் அமல்படுத்துவது உள்பட ஒரு சில முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது