1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (22:41 IST)

டெல்லி வருகிறார் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன்!

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நல்ல நண்பர்களாக இருக்கும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
டெல்லிக்கு வரும் அவர் இந்த சுற்றுப்பயணத்தின்போது புனேவுக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் மையமான சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா என்ற தொழிற்சாலைக்கு அவர் செல்வார் என்றும் அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுவது குறித்து பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகைமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது