செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (17:24 IST)

சிங்கிள் ஷாட் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்த பார்த்திபன்!

பார்த்திபன் ஒரே ஷாட்டில் எடுக்கப்போகும் படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார்.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது. இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறார். இதில் வித்தியாசமான முயற்சியாக முழுப்படத்தையும் ஒரே ஷாட்டாக எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். உலகளவில் இதுபோல சில படங்கள் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் தமிழில் இதுவே முதல்முறை. பார்த்திபனின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்துக்கான ஒத்திகைகளை இப்போது கோவளம் பகுதிக்கு அருகே பரபரப்பாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.