திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (21:02 IST)

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது!

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழத்தில் கடந்த 13 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி  நிறைவடைகிறது. அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் 14 ஆம் தேதி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த  நிலையில், தமிழகம் முழுவதும்  பிளஸ் 2 தேர்வை 8,51,303 மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாளை திருத்துவோர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று  பள்ளிக்கல்வித்துறை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், பிளஸ் 2 விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.