திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (15:44 IST)

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - மத்திய அரசு

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை  ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்த, வருமான வரித்துறை பலவேறு கால கட்டங்களாக மக்களுக்கு அவகாசம் வழங்கி வருகிறது.

கடைசியாக மார்ச் 21 ஆம் தேதி ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென்றும், இதைச் செய்யாவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மேலும், ஆதாருடன் பான் கார்டு இணைக்காதவர்கள் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கள்  பான்கார்டை எந்தவித பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது; பான் எண் செயலிழந்துவிடும் என்று கூறியிருந்தது.

ஆனால், இன்னும் சிலர் தங்கள் ஆதாருடன் பான்கார்டை இணைக்காமல்  உள்ள நிலையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசத்தை  ஜூன் மாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது மத்திய அரசு.