1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (15:13 IST)

முன்னாள் மனைவி, தம்பியிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் நவாசுதீன் வழக்கு

தனது முன்னாள் மனைவி ஆலியா மற்றும் தம்பியிடம் ரூ. 100 கோடி நடிகர் நவாசுதீன் சித்திக்  வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பாலிவுட் பிரபல நடிகர்  நவாசுதீன் சித்திக். இவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார்,

தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நவாசுதீன் சித்திக்கின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நவாசுதீன் சித்திக் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை வீட்டிற்குள் விட நவாசுதீன் மறுப்பதாகவும் கூறி, அவரது முன்னாள் மனைவி ஆலியா  ஒரு வீடியோ வெளியிட்டதுடன், போலீஸிலும் புகாரளித்தார்.

இதுகுறித்து நவாசுதீன் சித்திக்,’’ நான் அமைதியாக இருப்பதால் என்னை எல்லோரும் கெட்டவாகப் பார்க்கிறார்கள். அலியாவும், நானும் விவாகரத்து செய்துவிட்டோம். அவருக்குப் பணம் வேண்டுமென்பதற்காக என் குழந்தைகளைப் பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு என்னிடம் வழக்குகள் போட்டிருக்கிறார். அலியாவுக்குப் பணம்தான் முக்கியம் என்று நவாசுதீன் சித்திக்  கூறியிருந்தார்.

சினிமா வட்டாரத்தில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,   நடிகர்  நவாசுதீன் சித்திக் ரூ.100 நஷ்ட  ஈடு கேட்டு முன்னாள்  மனைவி ஆலியா, மற்றும் அவரது தம்பி சமாசுதீன் சித்திக் மீது மும்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தனக்கு எதிராக அவதூறு பரப்புவதையும், இழிவுபடுத்துவம் வகையில் கருத்துகள் கூற ஆலியா மற்றும் சமாசுதீன் சித்திக்கிற்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும், அதேபோல் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும்,கடந்த 2008 ஆம் ஆண்டு சம்சுதீன் சித்திக்கை என் மேலாளராக நியமித்தேன். அவர் என்னை மோசடி செய்து, பல சொத்துகள் வாங்கினார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, என் மனைவி ஆலியாவை எதிராக புகாரளிக்கும்படி கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளர்.

இந்த மனு மீதான விசாரணை வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.