முன்னாள் முதல்வர் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் !!
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில், முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில், கர்நாடக அமைச்சரவையில், சிறுபான்மையினருக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து, அந்த 4% இட ஒதுக்கீடு, ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து ஆகிய சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டது.
இந்த உள்ஒதுக்கீடு தொடர்பாக ஆளுங்கட்சி அறிவிப்பால் தற்போது அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது.
சதாசிவ கமிஷன் அளித்துள்ள அறிக்கையின்படி, கர்நாடக அரசு உள்ஒதுக்கீட்டை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது. இதனால், பஞ்சாரா சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
சதாசிவ கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், தங்களுக்கு 4% இட ஒதுக்கீடு கிடைத்தால், அது சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, போராட்டம் நடந்து வருகிறது.
சிமோகாவில் இருந்து தொடங்கிய இப்போராட்டத்தினர் ஈடுபட்டவர்கள், சிகாசி எடியூரப்பாவின் வீட்டிற்குச் சென்று, அவரது வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது, போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறையாகா மாறியது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.