வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (10:53 IST)

கேரளாவில் வரலாறு காணாத பேரழிவு: பினராயி விஜயன் நேரடி விசிட்!

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்து வருவதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. 
 
பல வீடுகளில் வெள்ள நீர் புகுந்தும், பல வீடுகள் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
 
கனமழையின் காரணமாக கேரளாவில் உள்ள 24 அணைகள் நிரம்பிவிட்டன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில், கேரளாவில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். எதிர்கட்சி தலைவரும் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் அனைத்து அரசு அதிகாரிகளையும் அமைச்சர்களையும் மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.