கேரளாவில் வெளுத்து வாங்கும் மழை: ராணுவ உதவியை நாடும் அரசு!
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆசியாவில் மிகப்பெரிய வளைவு அணையான இடுக்கி அணை தனது முழுக்கொள்ளளவை எட்டும்தருவாயில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை திறக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் ஆபத்தான கட்டத்தை தாண்டி செல்கிறது.
கோழிக்கோடு, வயநாடு, மத்திய, வடக்கு கேரள பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளனர். கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க ராணுவம், கப்பற்படை, கடலோர காவற்படை, தேசிய பேரிடர் மீட்பு குழு ஆகியவற்றின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், மிகப்பெரிய அளவுக்குச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.