கேரளாவுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்க அரசு எச்சரிக்கை
கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் கேரளாவிற்கு இப்போது சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என தன் நாட்டு மக்களை அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்க குடிமக்கள் தங்கள் பயணங்களை தள்ளிவைக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொச்சி உள்பட கேரளாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளதால் கேரளாவில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.