1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (21:54 IST)

அணைகள் திறப்பு: தமிழகத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
கபினி அணையில் இருந்து 70,000 கன அடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கன அடி என்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் திறப்பு 25,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
கேரளாவில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக முல்லைப்பெரியார் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.