செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (13:43 IST)

திருப்பதியில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு.. ஏழுமலையானை கணவருடன் தரிசனம் செய்த காஜல்!

kajal tirupathi
திருப்பதியில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு.. ஏழுமலையானை கணவருடன் தரிசனம் செய்த காஜல்!
கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் ஓய்வு நேரத்தில் தனது கணவருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
திருப்பதியில் நடைபெறும் ’இந்தியன் 2படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் தனது கணவருடன் ஏழுமலையானை தரிசனம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது 
 
திருப்பதியில் தரிசனம் செய்து முடித்த காஜல் அகர்வாலுக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த காஜல் அகர்வால், ‘திருமணம் முடிந்து முதல் முறையாக தற்போது திருப்பதி கோயிலுக்கு வந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக கணவருடன் திருப்பதி வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்