கொரோனா பரவல் எதிரொலி: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

neet
கொரோனா பரவல் எதிரொலி: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!
siva| Last Updated: வியாழன், 15 ஏப்ரல் 2021 (19:27 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் முதுகலை மருத்துவ பட்டப் படிப்பிற்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அரசியல்வாதிகள் பலர் கோரிக்கை விடுத்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சிபிஎஸ்சி தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது போல் முதுகலை மருத்துவ நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்த மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதுகலை நீட் தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது

கொரோனா காரணமாக வரும் 18ம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து தற்போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :