லோகேஷின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… கதை சொல்லி சம்மதம்!

Last Modified வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:14 IST)

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய எல்லா படங்களும் வெற்றி பெற்றதை அடுத்து அவர் தென்னிந்திய திரையுலகில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்து வருகிறார். இப்போது கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து ஒரு கதை சொல்லி அதற்கு சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம் படத்தை முடித்த பின் அந்த படத்தில் அவர் கவனம் செலுத்துவார் என சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :