அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாது… விராட் கோலி நெகிழ்ச்சி!

Last Updated: வியாழன், 15 ஏப்ரல் 2021 (17:44 IST)

விராட் கோலி தந்தையாய் இருப்பதின் சந்தோஷத்தை வெளிப்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவருக்கும் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர்கள் வமிகா என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்போது ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் கோலி தனது மகள் வந்த பின்னர் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் ‘உங்கள் குழந்தை உங்களைப் பார்த்து சிரிக்கும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தந்தையாக இருப்பதை அனுபவிக்க தான் முடியும். வெளிப்படுத்த முடியாது’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :