10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!

10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!
siva| Last Updated: வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:00 IST)
10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்து உதவிய பிரபல நடிகர்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் அனைத்து மருத்துவமனைகளிலும் பற்றாக்குறையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் பிரபல நடிகர் ஒருவர் 10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக கொடுத்து உதவியுள்ளார்

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த போது புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு நபர்களுக்கு உதவி செய்தவர் நடிகர் சோனு சூட். இதற்காகவே கோடிக்கணக்கில் செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தது

இதனையடுத்து உடனடியாக அந்த மருத்துவமனைக்கு 10 டன் ஆக்சிஜன் சிலிண்டரை நடிகர் சோனு சூட் அனுப்பி உள்ளார். மேலும் வேறு எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் செய்து தருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கு தயங்க வேண்டாம் என்றும் முடிந்த அளவு அனைவரும் உதவி செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :