வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 மே 2025 (13:27 IST)

அரசியலில் நம்பிக்கை முக்கியம்.. சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்: பிரேமலதா

Premalatha
அரசியலில் நம்பிக்கை முக்கியம் என்றும், சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என்றும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலில் சொன்னதைப் பின்பற்றுவது மிக முக்கியம். சொல்வது ஒரு பக்கம், அதை நிறைவேற்றுவது தான் நம்பிக்கையை உருவாக்கும். மக்கள் நம்புவது செயலில் தான்” எனக் குறிப்பிட்டார்.
 
அதிமுக  கடந்த பொதுத் தேர்தலின் போது, தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை. இது எங்களுக்குரிய உரிமை. அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது கடமை.
 
 2026 தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள மாநாட்டில் எதிர்காலக் கூட்டணி நிலைபாடுகள் அறிவிக்கப்படும் என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran