கொரோனா எதிரொலி: மேற்குவங்க மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தலா?

election
கொரோனா எதிரொலி: மேற்குவங்க மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தலா?
siva| Last Updated: வியாழன், 15 ஏப்ரல் 2021 (18:18 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் எட்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளது என்பதும் இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் ஐந்தாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தால் அடுத்து வரும் நான்கு கட்ட தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என மேற்குவங்க மாநில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இனிவரும் நான்கு கட்ட தேர்தல்களும் ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது என்றும் எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அறிவித்தபடி தான் தேர்தல் நடைபெறும் என்றும் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :