தொடர்புடைய செய்திகள்
- அக்டோபர் 13-இல் நாடு முழுவதும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்!
- இன்று முதல் மீண்டும் தியேட்டர்கள் ஸ்டிரைக்! ஸ்பைடர், கருப்பன் கதி என்ன?
- ரஜினி, விஜய் படங்களின் ஷூட்டிங் தொடங்கியது
- ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக களமிறங்கும் தலைமை செயலக ஊழியர்கள்
- வேலைநிறுத்தம் செய்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச்செயலாளர் உத்தரவு
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் திடீர் வாபஸ்!
நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 13ஆம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல் பங்குகள் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போராட்டம் திடீரென சற்று முன்னர் வாபஸ் பெறப்பட்டது
தினசரி விலை நிர்ணய முறைக்கு எதிர்ப்பு, பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரிவிதிப்புக் கீழ் கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 13-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதற்கான காரணத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
