செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (06:57 IST)

வேலைநிறுத்தம் செய்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச்செயலாளர் உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமைச்செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.



 
 
போராட்டம் செய்யும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்த வேறு வழிகளை பின்பற்ற வேண்டும் என்றும் வேலைநிறுத்தம் ஒரு ஆயுதமல்ல என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமைச்செயலாளர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். 
 
அரசுப்பணியில் ஈடுபடுவோர் வேலைநிறுத்தம் செய்ய உரிமை கிடையாது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் வேலைநிறுத்தத்தை தொடர்வது சரியல்ல என்றும், மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.