''பெட்ரோல்,டீசல் விலை குறையும் ''- பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்

PETROL
Increase of excise duty on petrol and diesel
Sinoj| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (19:59 IST)

சர்வதேசச் சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயரும் போது அது பெட்ரோல் டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சமீபகாலமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை என்றுமில்லாத வகையில் உச்சத்தைத் தொட்டு வருகிறது.

இந்நிலையில் நாடு பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.11 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.45 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெட்ரொல் , டீசல் விலையை சர்வதேச எண்ணெய் விலைக்கேற்ற அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே விலை உயர்த்தி வருவதால் தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமிருக்காது உயரத்தான் போகிறது என மக்கள் பேசி வந்த நிலையில் தற்போது மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: குளிர்காலம் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல்,டீசல் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :