திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (11:23 IST)

இந்த செடிய பாத்து பயிரை சொல்லிட்டா ராஜினாமா பண்றேன்! – ராகுலுக்கு சவால் விடுத்த அமைச்சர்!

மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் விடுத்துள்ள சவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல இடங்களில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு இதுகுறித்து உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்களது போராட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை ராகுல் மற்றும் பிரியங்கா தவறாக வழிநடத்துவதாக கூறியுள்ள அவர் “ராகுலால் சாதாரண ஆடு மற்றும் செம்மறி ஆடுகளையே வேறுபடுத்தி பார்க்க தெரியாது. இருவரும் விவசாய நிலங்களில் உள்ள செடிகளை வைத்து அது என்ன பயிர் என கூறிவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலை விட்டு விலகி விடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.