1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Pet animals allowed in akasa air flight

இனி செல்ல பிராணிகளும் விமானத்தில் பறக்கலாம்: ஆகாசா ஏர் அறிவிப்பு

akasa air
இனி செல்லப் பிராணிகளும் ஆகாயத்தில் பறக்கலாம் என ஆகாசா ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் தனது சேவையைத் தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் தற்போது செல்லப்பிராணிகளை பயணிகள் தங்களுடன் அழைத்து வரலாம் என அனுமதி அளித்துள்ளது
 
செல்ல பிராணிகளுக்கு என தனியாக கூண்டு வைத்து அழைத்து வர வேண்டும் என்றும் அந்த பிராணிகள் கார்கோ பகுதியில் வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
 
35 கிலோ எடை வரை செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படும் என்று செல்லப் பிராணிகளுக்கான பயண டிக்கெட் விற்பனை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் விமானத்தில் பயணம் செய்யும் செல்லப்பிராணிகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஆலோசனை செய்து அதற்கான கொள்கைகள் வகுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கா அறிவுரை