வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (09:19 IST)

ஆன்லைன் மோசடியில் 100 கோடி ரூபாய் அபேஸ் – ஊரே சொகுசு வாழ்க்கை !

கைது செய்யப்பட்ட இருவர்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஓ எல் எக்ஸ் விற்பனை என சொல்லி 100 கோடி ரூபாய் போர்ஜரி செய்து ஒரு ஊரே சொகுசாக வாழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற பகுதியில் உள்ள துநாவல் என்ற கிராமத்தில் உள்ளவர்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அவர்களை தமிழகத்தைச் சேர்ந்த போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராணுவ அதிகாரி எனப் பொய் சொல்லி பொருட்களை OLX தளம் மூலமாக பொருட்களை விற்பதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். பணம் எந்த வங்கிக் கணக்குக்கு செல்கிறது என்பதைக் கண்டுபிடித்து அதை ட்ராக் செய்து போலிஸார் இந்த கும்பலை பிடித்துள்ளனர். கைதின் போது ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியுள்ளனர் போலீஸார்.

கொள்ளையடித்த பணத்தை ஊர் மக்களுக்கும் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல பெயர் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தீரன் பட பாணியில் தமிழக போலிஸார் அவர்களைக் கைது செய்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.