புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (15:55 IST)

வீதியில் சிறுமியின் ஜடையை வெட்டி அவமானப்படுத்திய கொடூரம்..

தனது வீட்டில் உள்ள சிறுமி, தனக்கு அறிமுகமான சிறுவனுடன் அடிக்கடி போனில் பேசி வருவதை கண்டிக்கும் வகையில், அச்சிறுமியின் குடும்பத்தினர் ஜடையை வெட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜபுரம், சோந்த்வா பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி அவளுக்கு நெறுங்கிய சிறுவனுடன் போனில் அடிக்கடி பேசி வருவதாக சிறுமியின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் உச்சம் பெற்ற நிலையில், அச்சிறுமியை அக்குடும்பத்தினர் உதைத்து துன்புறுத்தியுள்ளனர்.

அதன் பிறகு பொது வெளியில் வைத்து அச்சிறுமியின் ஜடையை வெட்டி அவமானப்படுத்தியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.