செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (15:50 IST)

விமானத்திற்குள் சுற்றி வந்த புறாக்கள்! – தாமதமான விமானம்!

ஜெய்ப்பூர் சென்ற கோஏர் விமானத்திற்குள் புறாக்கள் இரண்டு புகுந்ததால் விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூர் புறப்பட கோஏர் நிறுவன விமானம் ஒன்று தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் அமர்ந்ததும் சில நிமிடங்களில் புறப்பட விமானம் தயாராக இருந்தபோது விமானத்திற்குள் இரண்டு புறாக்கள் இருப்பதை பணிப்பெண்கள் பார்த்திருக்கிறார்கள்.

அவற்றை விமானத்தை விட்டு வெளியேற்ற அவர்கள் முயற்சிக்க அவை விமானத்திற்குள் அங்குமிங்குமாக பறந்துள்ளன. பல நிமிட போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக திறந்திருந்த கதவு வழியாக அவை வெளியேறியிருக்கின்றன. புறாக்களின் இந்த சேட்டையால் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

புறாக்கள் விமானத்திற்குள் அங்குமிங்கும் பறந்ததை விமானத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.