வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (17:58 IST)

தம்பியை மனைவியோடு சேர்ந்து கொன்ற அண்ணன் - சொகுசு வாழ்க்கையால் வந்த வினை !

கோவாவில் கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து தம்பியைக் கொன்ற சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கோவாவில் 2 தினங்களுக்கு முன்னர் சர்வேஷ் என்பவரின் பிணம் அவரது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சர்வேஷின் அண்ணன் சந்தீஷ் மற்றும் அவரது மனைவி லத்திகா போலிஸில் புகார் அளித்தனர். இவர்கள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததால் போலீஸாருக்கு இவர்கள் மேலும் சந்தேகம் வந்துள்ளது.

அதனால் அவர்கள் இருவரையும் ரகசியமாக கண்காணித்துள்ளனர். அப்போது இருவரும் சர்வேஷின் பணத்தை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்ற முயன்றபோது போலிஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் ‘ எங்கள் சொகுசு வாழக்கைக்காக வீடு மற்றும் கார் வாங்க சர்வேஷ் எங்களுக்கு உதவினார். ஆனால் கொஞ்ச காலத்தில் அவர் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தார். அதனால் எங்களுக்குள் சண்டை வர ஆரம்பித்தது. ஒருநாள் பணத்தைக் கேட்டு சர்வேஷ் என் மனைவியை அடித்து அவர் புடவையைக் கிழித்தார். அதனால் கோபமாகி நாங்கள் அவரைத் தாக்க அவர் இறந்துவிட்டார்’ எனக் குற்றத்தை ஒத்துக் கொண்டுள்ளனர்.