ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜூலை 2022 (07:55 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயில்: சாமி தரிசனத்திற்காக காத்திருந்ந்த தமிழக பக்தர் உயிரிழப்பு

tirupathi
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்த தமிழக பக்தர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தமிழகத்திலிருந்து சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே 
 
அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 64 வேதாசலம் என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு சாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தார்
 
அப்போது அவர் திடீரென உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய உறவினர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர்.
 
ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வரிசையில் உள்ள கழிவறையில் தான் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது