திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (10:45 IST)

திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! – திருப்பதி தேவஸ்தானம்!

tirupathi
திருப்பதியில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படும் நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது.

திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். அதிகமான பக்தர்கள் வருகை தரும் நிலையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், கால விரயத்தை குறைக்கவும் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன.

ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை வாங்க பெரும் டிமாண்ட் உள்ளது. கடந்த மாதத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியான சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.