திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (23:06 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவு காணிக்கை!

Thirupathi
உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் பக்த்ர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதன்படி  நேற்று ஒரே  நாளில் மட்டும் ரூ.6.9 கோடி காணிக்கை  பக்தர்களால்  செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்  கடந்த 2012 ஆம் ஆண்டடு ஏப்ரல் 1 ஆம் தேதி  ஒரே நாளில் ரூ.5.73 கோடி செலுத்தியதே அதிகப்பட்ட காணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.