வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (18:50 IST)

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் ஊழியரை திட்டி, தாக்கிய பயணி

Flight
டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்திய விமானம் ஊழியரை திட்டி தாக்கிய  பயணியை  அதிகாரிகள் கைது செய்தனர்.

ஏர் இந்திய விமானம் ஒன்று, டெல்லியை நோக்கி இன நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது வரும் வழியில், பயணி ஒருவருக்கும், அந்த விமான ஊழியருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை எழுந்துள்ளது.

இதில், ஊழியரை அடிக்கவும் பயணி  முயன்றுள்ளார். இதனால், விமானத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதில், சக பயணிகள் பாதிக்கப்பட்டனர். பின்னர், டெல்லி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பின், அந்த பயணி ஊழியரை கடுமையான வார்த்தை பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த பயணியை பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். சமீபத்டிஹில், விமானத்தில் இதுபோன்று நடந்துகொள்ளும்  நபர்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு தடைவிதிக்கவும் சிவில் போக்குவரத்து இயக்குனரக விதிகள் கூறுகின்றன.

டெல்லியில், விமான ஊழியரை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், டெல்லியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில், பஞ்சாப்பை சேர்ந்த  நபர், விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியதாக துன்புறுத்தல் செய்ததாக அவருக்கு 2 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டது, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.