1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified புதன், 24 மே 2023 (19:25 IST)

பிரபல நடிகை வைபவி உபாத்யா சாலை விபத்தில் மரணம்...

vaibhavi upadhyaya
இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சர் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி சினிமாவில்  பிரபல நடிகை வைபவி உபத்யா( 30). இவர் சாராபாய் விசிஸ் சாராபாய் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று  நடிகை வைபவி உபாத்யா தன் வருங்கால கணவருடன்  இமாச்சலபிரதேச மாநிலத்தின் குலு என்ற மாவட்டத்திற்கு தன் காரில் சென்று கொண்டிருந்தார்.

பஞ்சர் என்ற இடத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் கார் சென்று கொண்டிருக்கும்போது கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், நடிகை வைபவி காரில் இருந்து வெளியே வர முயற்சி செய்த நிலையில், தலையில் படுகாயமடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் காரில் சென்ற வருங்கால கணவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், நடிகையின் மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.