1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified வெள்ளி, 26 மே 2023 (20:07 IST)

காணாமல் போன நடிகர் சடலமாக மீட்பு…ரசிகர்கள் அதிர்ச்சி

brazil actor jebarson dead
பிரேசியில் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர்  ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா(44). இவர் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திடீரென்று காணாமல் போனார்.  இவர் காணாத நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து  அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ரியோ டி ஜெனிரோவில் ஆளில்லாத இல்லாத  இடத்தில்  உள்ள ஒரு பகுதியில், மரப்பெட்டியில் புதைப்பட்டிருப்பதாக போலீஸுக்கு தகவல் தெரியவந்தது.

சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  தடயவியல் பரிசோதனையில் இறந்துபோந்து நடிகர் ஜெபர்சன் என்பது உறுதியானது.

மேலும்,  அவர் கழுத்தில் இரும்பு கம்பி சுற்றப்பட்டிருந்தது அத்துடன் அவர் உடலில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவம்  ஊற்றப்பட்டிருந்தது. அதனால், இது கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,  பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் போலீஸாரால் உறுதி செயப்பப்படும் என கூறப்படுகிறது.