வியாழன், 20 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 மார்ச் 2025 (11:20 IST)

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாட்டை குறைக்க புதிய விதிமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் வீடுகள், ஹோட்டல்கள் என பெரும்பாலான பகுதிகளில் சமையல் வேலைக்கு கேஸ் சிலிண்டர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப வீட்டு உபயோக சிலிண்டர், வணிக சிலிண்டர் என இருவகை சிலிண்டர்களை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன.
 

 

கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்ஜுவாலா திட்டம், மாநில அரசின் திட்டங்கள் உள்ளிட்டவற்றால் மக்களுக்கு அதிகமான கேஸ் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையான அளவு கேஸ் சிலிண்டர் விநியோகத்திலும் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் சிலிண்டர்களை வாங்கி அதை இணைப்பு பெற முடியாத பலருக்கு விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் உள்ளது.

 

அதனால் மக்களின் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டை வரையறை செய்யும் படியாக ஆண்டுக்கு ஒரு இணைப்புக்கு 15 சிலிண்டர்கள் வரை மட்டுமே பெற முடியும் என கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 15 சிலிண்டர்கள் பெற்றவர்கள் அதற்கு மேல் தேவைப்பட்டால் உரிய காரணத்தை கடிதமாக அளித்தால் மேற்கொண்டு சிலிண்டர்களை பெறலாம் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K