பெண்கள் சுயதொழில் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கும் விதமாக சென்னையில் பிங்க் ஆட்டோக்கள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது முதலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் பெண்களின் கல்வி, தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அவ்வாறாக அறிவிக்கப்பட்ட ஒரு திட்டம்தான் பிங்க் ஆட்டோ. டிரைவிங் லைசென்ஸ் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் அரசால் பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு சர்வதேச மகளிர் தினத்தன்று பிங்க் ஆட்டோக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதை தொடர்ந்து 2ம் கட்டமாக மேலும் பல பெண்களுக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளன.
இந்த பிங்க் ஆட்டோவை பெற பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அவர்கள் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதுடன், வயது வரம்பு 20 முதல் 45க்குள் இருக்க வேண்டும். கைம்பெண்கள் ஆதரவற்ற பெண்களுக்கு ஆட்டோ வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும், முக்கியமாக விண்ணப்பதாரர்கள் சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த பெண்கள் தங்கள் விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு அலுவலகங்களில் ஏப்ரல் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K