கொரோனாவுக்கு நடுவே பாரா ஒலிம்பிக்; இந்திய வீரர்கள் தேர்வு தொடக்கம்!
கொரோனா பாதிப்பிற்கு நடுவே ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய வீரர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளும் முழு வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாரா ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான போட்டிகள் அடுத்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.